எமது பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா மற்றும் விஐயதசமி நிகழ்வின் பதிவுகள். முதன்மை விருந்தினராக கலாபூசணம் க.இ.கமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வாணிவிழா முன்னிட்டு நடாத்தப்பட்ட கோலம்போடுதல்.பண்ணிசை.மாலைகட்டுதல் மற்றும் பொதுஅறிவு போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.
இன்று (01.10.2025) எமதுபாடசாலையில் நடைபெற்ற சிறுவர்தின நிகழ்வுகள்!
400000.00பெறுமதியான நீர்சுத்திகரிப்ப இயந்திரம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி. செ.மோகனதாஸ் சுவாமிகளினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டு இன்று அவரினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது
யா / இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று உள்ளனர். படத்தில் சாதனை புரிந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி.கோ.செந்தில்நாதன் அவர்களும் பாடசாலை அதிபர் திரு .தி.அபராஜிதனும் காணப்படுகின்றனர். மோ. விதேஷ் (150), தி.அக் ஷ யன் (133), த.ஸஷ் வின் (150), ச.சானுஜா (165), கே.கபிஷ்ஜா (138), பி.கிஷாவ்னா (144).
Scroll to Top