வரணியம் பதியிலே இடைக்குறிச்சி (J/341) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பாரம்பரியபெருமைகள்கொண்ட பாடசாலையாக யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம் விளங்குகின்றது. குரு குலக் கல்வி முறையில் செயற்படத் தொடங்கிய இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த பெருமை இவ்வூர்க் கிராமசேவகர் திரு.சி.அம்பலவாணர் அவர்களையே சாரும்.
1928 ல் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.ஜ.முருகேசு அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பாடசாலை அமைந்துள்ள நிலத்தை மனமுவந்து வழங்கி திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களும் திரு.தம்பு பாலசுப்பிரமணியம் அவர்களும் தமக்கே பெருமை சேர்த்துக்கொண்டனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது சுண்ணாம்புக் கல்லினால் அமைக்கப்பட்ட 20X80 அடி கொண்ட கட்டிடம் ஒன்றையே கொண்டிருந்தது
அதிபர்களாக கடமையாற்றியவர்களின் விபரங்களை நோக்குவோமாயின்
1. திரு.I.முருகேசு 1928-1930
2. திரு.M.வேலுப்பிள்ளை 1930-1951
3. திரு.S.தங்கராஜா 1951-1960
4. திரு.K.பொன்னுத்துரை 1960-1965
5. திரு.V.நடராசா 1965-1968
6. திரு.V.வீரகத்தி 1968-1973
7. திரு.K.பேரம்பலம் 1973-1977
8. திரு.M.ராஜரட்ணம் 1977-1989
9. திரு.N.தம்பு 1989-1995
10. திரு.K.சிவானந்தம் 1995-1997
11. திரு.N.நவரட்ணராஜா 1997-1998
12. திருமதி.T.பரமானந்தம் 1998-1999
13. திருமதி.M.குமரகுலசிங்கம் 1999-2002
14. திரு.S.தர்மலிங்கம் 2002-2013
15. திரு.S.கோடீஸ்வரன் 2013-2017
16. திரு.U.தனசங்கர் 2017-
ஆகியோர் இதுவரை காலம் பணியாற்றியுள்ளமை சிறப்புக்குரியது.
பாடசாலையின் தனித்துவத்தை பேணும் வகையில் கீதம், கொடி, இலச்சினை என்பன அமைந்துள்ளன. “வாழ்க வாழ்க வாழ்கவே…..” என்று தொடங்கும் இக்கீதம் கல்வியும் ஒழுக்கமும் பெற்று புகழுடன் வாழ்தலைக் வலியுறுத்தி நிற்கின்றது. நாவல், பச்சை வண்ணங்களைக் கொண்டதாக பாடசாலையின் கொடி மிளிர்கின்றது. பாடசாலையின் இலட்சனையின் மகுட வாசகம் “உண்மை, அறிவு, நேர்மை” என்றவாறாக அமைக்கப்பட்டு அறிவுடன் பண்பையும் வலியுறுத்திக் கொள்கிறது. அத்துடன் பனை, நெற்கதிர், விளக்கு ,புத்தகம் என்பன காணப்படுகின்றன. ஊரின்வளத்தை பனை, நெற்கதிர் குறித்து நிற்பதோடு கற்பதன் முலம் விளக்குப் போல ஒளிகிடைக்கும் என்பதையும் ஏனையவை சுட்டிநிற்கின்றன.
பாடசாலையின் தூரநோக்கு இன்றைய உலகின் சவால்களுக்கு முகம்கொடுத்து வாழக்கூடிய மாணவர்சமூகத்தை உருவாக்கல்” என்பதாகும் செயல் நோக்கு “ஆசிரிய வாண்மை விருத்தியை அதிகரித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களின் நற்பண்பு, வினைத்திறன் மட்டத்தை மேம்படுத்தல்” என்பதாக அமைந்துள்ளது தூரநோக்கிற்கேற்றவாறு செயல் நோக்கு வடிவமைக்கப்பட்டு பாடசாலை பயணித்து வருகின்றது.
1961 இல் அரச பாடசாலையாக இது மாற்றப்பட்டுள்ளது அருகே ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனது நாமத்தை தாங்கிப்பாடசாலை அமைந்துள்ளமை சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
1977 ம் ஆண்டு அங்குள்ள முதலாவது மண்டபம் கட்டப்பட்டு தற்போது அது வகுப்பறைகளாக பிரிக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றது. (தற்போதய தரம் 5, விஞ்ஞான அறை, நூலக அறை ஆகியன.) 1985 ம் ஆண்டு 3 வது கட்டிடம் 20X60 அமைக்கப்பட்டது. (தற்போதைய தரம் 1,2 வகுப்புகள்) 1999-2002 காலப்பகுதியில் 100 X 20 சதுரஅடி கொண்ட தற்காலிக கட்டிடம் அமைக்கப்பட்டு 2002-2013 காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர் அதனை 100X20 சதுரஅடி நிரந்தரக்கட்டிடமாக மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 10.01.2000 அன்று யா/வரணி ஸ்தான அ.மி.த.க பாடசாலை மூடப்பட்டமையால் மேற்படி பாடசாலையின் அசையும் சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் எமது பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன. பாடசாலையின் தெற்குப்பக்க மதிலும் இக்காலப்பகுதியில் பாடசாலையின்; நலன் விரும்பி திரு.தம்பு செல்வகுமார் உதவியுடன் கட்டப்பட்டு 01.08.2014 இல் திறந்து வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு பாடசாலையின் மைதானத்தேவையை உணர்ந்து வரணி ஒன்றியம் UK யினால் காணிக்கொள்வனவு செய்யப்பட்டுச் சீரமைக்கப்பட்டு சுற்றுவேலி அமைக்கப்பட்டு அதன் தலைவர் திரு தம்பு செல்வகுமார் அவர்களல் 17.04.2019 இல் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2021ம் பாடசாலையின் கட்டீடத்தேவை காணப்பட்டதை அடுத்து PSDG நிதியுதவியின் கீழ் 25X70X2 அளவுடைய கட்டீடத்திற்கான வேலைகள் தொடங்கிவைக்கப்பட்டது. பாடசாலை நுழைவாயிலானது அமரர் திரு,திருமதி.நடராசா இராசம்மா (விதானையார்) அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு 09.06.2022 அன்று அவர்களின் பிள்ளைகளால் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பாடசாலையில் சரஸ்வதி சிலையானது திரு,திருமதி குலசேகரம்பிள்ளை சிவராசா குடும்பத்தினரால் அமைக்கப்பட்டு 09.06.2022 அன்று திரு.கு.சிவராசா அவர்களினால் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.